ஆகஸ்ட்-22 பகஹி புல்வா டோலா, ஜெய்நகர் சோட்டா, ஜோகாபட்டி, பண்டாடிஹ், நௌரங்கியா, கர்ஹரி, நோனியா டோலா, சுகௌலி, கர்மாஹ்வா டோலா, பைரியா, ஆம்தேயி, பகாஹா, ஷ்யாம்பூர் பேதாணியா, பலாசக், பெல்வநியா மற்றும் முசஹரி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற சிறுவர் நிகழ்ச்சிகளில், வேத வசனங்கள், கதைகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் 'தைரியம் இழக்காதிருங்கள்" என்ற கருப்பொருளின் கீழ் கிறிஸ்துவின் அன்பினை சிறுவர் சிறுமியரின் உள்ளங்களில் விதைக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் தேவனை அறியவும், அவர்களது குடும்பத்தினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-23 ஷாபூர் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 250 பேர் பங்கேற்றனர். சகோ. சுரேஷ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்காக ஜெபித்தார். நயா கான் தேச்சனா கிராமத்தில் புதிதாக 8 பேருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. ஜூலை 3 அன்று சந்தேஷ் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் நற்செய்திப் பணிகளுக்காகவும், சுவிசேஷத்தைக் கேட்டவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-24 'வெற்றியாளனாயிரு" என்ற தலைப்பின் கீழ் பெத்தியா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 120 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில், ஊழியர்கள் சகோ. பென்சன் மற்றும்சகோ. வென்னிலவன் ஆகியோர் வாலிபர்களுக்கேற்ற செய்திகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தவும், சாட்சிகளாக அவருக்கென்று ஜீவிக்கவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-25 பீரோ, தராரி, பசந்த்பூர், பைரியா, சன்பட்டியா, பெத்தியா, ஹசன்பஜார், சந்தேஷ் காந்தர்பூர், சப்ரா, ஹாஜிபூர், வால்மீகி நகர்
மற்றும் பகாஹா பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக
ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின்
அனுபவத்தைப் பெற்ற 87 பேர், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை
வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!
இவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-26 கோபால்கஞ்ச்
பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், பணித்தளங்களில் உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும்,
ஆரா பணித்தளத்தில்
கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் கிடைக்கவும் மற்றும் சப்ரா பணித்தளத்தில்
நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காகவும் ஜெபிப்போம்.
.jpg)





