Feb 2026

 


பிப்ரவரி 20
 
ஜனவரி 16 அன்று நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டம் ஆசீர்வாதமாயிருந்தது; பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், டூமரி கோலாகாட் கிராம அரசுப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூலமாக 250 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்களின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். பள்ளிகளில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் தனி நபர் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 21 ஜனவரி 15 அன்று பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான கூடுகையில் 86 வாலிப சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். ஜெப வேளையில் பலர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டதுடன், கிறிஸ்துவுக்காகவும் வாழ தங்களை அர்ப்பணித்தனர். பெத்தியா பணித்தளத்தில் ஜெம்ஸ் பள்ளி தொடங்கப்பட எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக மற்றும் தடைகள் நீங்க ஜெபிப்போம்.

பிப்ரவரி 22 பெத்தியா, முஸஹரி தோலி, மச்சர்காவான், பரத்பட்டி, ஹசன் பஜார், சக்வத், சஹேஜ்னி, லௌகரியா, பைரியா மற்றும் ஜகதீஷ்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 863 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவித்து மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும், அமேத்தியா கிராமத்தில் 120 பேருக்கு கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாக நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளச் சிறுவர்கள் கிறிஸ்துவினால் தொடப்படவும், அவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.  

பிப்ரவரி 23 ஜனவரி 11 அன்று ராம்நகர் பணித்தளத்தில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 4 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பைரோகஞ்ச் பணித்தளத்தில் ஊழியத்திற்கு விரோதமாக எழும்புவோரை கர்த்தர் சந்திக்கவும், மிகுந்த எதிர்ப்புகளைச் சந்திந்துவரும் தேவரியா பணித்தள ஊழியர்களை கர்த்தர் பாதுகாக்கவும், சன்பட்டியா, நௌதன், நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம்.