Jan 2026

 


ஜனவரி -  22
டிசம்பர் 5, 2025 அன்று கோட்வா கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியத்தில் 65 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும், மச்சாஹா, பேதியா, பேரியா தட்வா நந்த்பூர், டோலா சுகௌலி, பிப்ரா, மந்திர் பாளி போன்ற பணித்தளங்களிலும் மற்றும் சனபட்டியா அரசு பள்ளியிலும் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களில் வேதாகமச் சம்பவங்கள், வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை சிறுவர் சிறுமியருக்கு அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஊழியங்களின் மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவண்டை சேர்க்கப்படவும், பாவத்திலும் மற்றும் பிசாசின் கட்டிலும் அகப்பட்டிருக்கும் ஜனங்கள் விடுதலையடையவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  23  நர்கட்டியகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 30 பெண்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோதரி எலிசாபா பெங்க்ரா கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற ஒவ்வொருவருக்கம் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளத்தில் பெண்கள் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், பெண்கள் மூலமாக சமுதாயத்தில் மற்றும் குடும்பங்களில் தேவன் மாற்றத்தைக் உண்டாக்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  24  டிசம்பர் 17, 2025 அன்று, சப்ரா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில், 130 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பழனிவேலு கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபரின் வாழ்க்கைக் கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் கூடவே அளித்து அவர்களுக்காக ஜெபித்தார். ஜெபவேளையின்போது, 60 வாலிபர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர் கிறிஸ்துவில் நிலைத்து நிற்கவும் மற்றும் கிறிஸ்துவை அறியாத பணித்தள வாலிபரை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 25 2025 டிசம்பர் மாதத்தில், பணித்தளங்களிலும் மற்றும் பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற்ற பல்வேறு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் மூலமாக சிறியோர், வாலிபர் மற்றும் பெரியோருக்கு கிறிஸ்து பிறப்பின் காரணத்தையும், கூடவே நற்செய்தியையும் அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். சன்பட்டியா, நோதன் மற்றும் நர்கட்டியகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்பட ஜெபிப்போம். 

ஜனவரி -  26  பேதியா மற்றும் நிமோஹியா பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 16 பேர் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பஹாகா பணித்தளத்தில் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வருடமாகத் தடைபட்டிருந்த ஆராதனையினை மீண்டும் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் ஊழியத்திற்கு எதிராயிருப்போரை கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.