December 2025

 வடமேற்கு மண்டலம்


டிசம்பர் 22 ஜம்ஷில்பூர், ராம்நகர், ஜங்கல்பூர், ஜம்ஷிலியா, சிலோகு மற்றும் கோஷம்குஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் மற்றும் ஞாயிறுப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 257 சிறுவர் சிறுமியருக்கு வேதாகம வசனங்கள் மற்றும் கதைகள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் மற்றும் அவர்களது குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 23 பெத்ரியா பணித்தளத்தில் நவம்பர் 8 அன்று நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 50 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். வாலிப வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளுடன், வேத வசனங்கள் மூலமாகவும் வாலிபரை கிறிஸ்துவண்டை வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும், சமுதாயத்தில் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் மாதிரிகளாக மாறவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 24 சடிகா மற்றும் குனிமாட் கிராமங்களில் நடைபெற்ற சுவிசேஷ மற்றும் தனிநபர் ஊழியங்களின் வாயிலாக சுமார் 50 பேருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. லாஹீ, மொஹ்ரிகரி பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 5 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 

டிசம்பர் 25 பிலோம் லுன்செக், பிலோம் ஜம்ஷிலியா, நிஜக் மற்றும் மிர்ஜாகட் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில், பணித்தள விசுவாசிகள் 446 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். நஸ்ரு ஜம்ஷிலியா பணித்தளத்தில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்போர் தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 26 ரிவில்காட் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், சகானி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் மாறவும், பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.