மார்ச் 22 : மோத்திஹாரி மாவட்டம் ஜாக்ரா கிராமத்தில் 35 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள், கதைகள் மற்றும் வேதாகம வசனங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், ராம்நகர், பகாஹா மற்றும் பைரோகஞ்ச் பணித்தளங்களில் ஞாயிறுப் பள்ளிகள் மூலமாக சிறுவர்களைச் சந்திக்கவும், பிப்ரவரி 4 அன்று மோத்திஹாரி பணித்தளத்தில் 110 சிறுவர் சிறுமியர் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். வால்மீகிநகர் பணித்தளத்தில் புதிதாக டியூசன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 23 : ராம்நகர் பட்காவ் பகுதியில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 பேர் பங்கேற்று நற்செய்தியைக் கேட்டனர். வால்மீகிநகர் நௌரங்கியா கிராமத்தில் நடைபெற்ற இரவு ஜெபக்கூடுகையின்போது, அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்டிருந்த சகோதரியை கர்த்தர் விடுதலையாக்கினார். ரக்சௌல் பகுதிகளில் குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் சுவிசேஷத்தையும் கூடவே பகிர்ந்துகொள்ள கர்த்தர் கிருபை செய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சுவிசேஷ ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
மார்ச் 24 : பிப்ரவரி 6 அன்று சுகௌலி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில், 12 வாலிப சகோதரர்கள் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் வாலிபர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், போதை வஸ்துக்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் வாலிபரை கர்த்தர் விடுதலையாக்கவும், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.
மார்ச் 25 :ராம்நகர், யோகாபட்டி, ஆரா மற்றும் நர்கட்டியாகஞ்ச் பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 32 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், மற்றவர்களுக்கு சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.
மார்ச் 26 : சப்ரா ஜெம்ஸ் செயல் மையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 விசுவாசிகளும், பஹாகா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 பேரும் பங்கேற்றனர். பாட்டினியா கிராமத்தில் புதிய வீட்டு சபையினைத் தொடங்க கர்த்தர் வழிதிறந்தார். தொடர்ந்து, ஹசன்பஜார் பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக் கூடுகையில் 85 பேர் கலந்துகொண்டனர். விசுவாசிகள் ஜெப வாழ்க்கையில் பெலப்படவும், புதிதாக ஆத்துமாக்கள் மந்தையில் சேரவும் ஜெபிப்போம்.
