SEP 2025

                                             வடமேற்கு மண்டலம்


செப்டம்பர் 21 பெத்தியா, சன்பட்டியா மற்றும் பைரோகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 180 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில் வேத வசனத்தின் அடிப்படையில் வாலிபத்திற்கேற்றச்  செய்திகளும் மற்றும் நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.  மேலும், சுகௌலி, ஷாபூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகைகளில் 155 வேர் பங்கேற்றனர். ஆகஸ்ட் 13 அன்று மஜௌலியா பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் மழையின் மத்தியிலும் 95 பேர் பங்கேற்று தேவ வார்த்தையைக் கேட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் வாலிபர்கள் மற்றும் பெண்கள் ஊழியங்களுக்காகவும், வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் எழுப்புதல் கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 22 ராவத், கோடாசாஹன், ஹசன்பஜார் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில் 198 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். ஜக்ஹரா மற்றும் டும்ரியா இப்பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் பின் தொடர் ஊழியர்களின் மூலமாக 40க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களை சந்தித்து அவர்களை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்தவும் மற்றும் நிலைத்திருக்கச் செய்யவும் கர்த்தர் உதவி செய்தார். விசுவாசிகள் மத்தியில் ஜெப தாகம் பெருகவும், பணித்தளங்களில் சிறுவர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 23 சகௌலி, பெத்தியா, ரிவீல்கஞ்ச் மற்றும் வால்மீகி நகர் பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 27 பேர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் நடைபெற்று வரும் புழழன நேறள ஊடரடி (புேஊ) ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர்  சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை எடுத்துரைக்கவும் மற்றும் வசனங்களைக் கற்றுக்கொடுக்கவும் கர்த்தர் உதவி செய்தார்.ஆகஸ்ட் 2 அன்று பிபாரியா கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் கூடுகையில், 40 பெரியவர்களும் கலந்துகொண்டு தேவ வசனத்தைக் கேட்டனர். 

செப்டம்பர் 24 பபிஷ்னுபுரா கிராமத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 55 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். மேலும், மோத்திஹாரி, படுக்காவ் போக்ரா டோலா ஆகிய பணித்தளங்களில் 12 புதிய குடும்பத்தினருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். ராம்நகர் டும்ரியா கிராமத்தில் விசுவாசியின் வீட்டில் நடைபெற்ற கூடுகையில், 15 பேர் புதிதாக் கலந்துகொண்டு சுவிசேஷத்தைக் கேட்டனர். சிங்கர்வாஹா, டான், கோபர்ஹியா, ஜாமுவா தோலா ஆகிய கிராமங்களில் கைப்பிரதிகள் மற்றும் தனிநபர் ஊழியங்களின் மூலமாக நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும்,  பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 25 சாண்டி மற்றும் ரிவீல்கஞ்ச் பணித்தளங்களில் நடைபெற்று வரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும், விரைவில் கட்டி முடிக்கப்பட்டு ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும், விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவும் ஜெபிப்போம்.