July 2026

 



ஜூலை 22 ஸ்ரீநகர் மற்றும் டும்ரா பணித்தளங்களில் ஜூன் 16 முதல் ஜூன் 18 வரை நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களில் 120 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். சகோ. குரு மஹிமா, சகோ. அபிஷேக் குமார் மற்றும் சகோ. சந்தோஷ் ஆகியோர் 'முயற்சியைக் கைவிடாதீர்கள்" என்ற கருப்பொருளைக் மையமாகக் கொண்டு கிறிஸ்துவின் அன்பைப் போதித்தனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அவர்களது பெற்றோர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜூலை 23 ஜூன் 3 அன்று பெத்தியா பணித்தளத்தில் 'முயற்சியைக் கைவிடாதீர்கள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற விடுமுறை வேதாகமப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கூட்டத்தில் சுமார் 70 சகோதர சகோதரிகள் பங்குபெற்றனர். பயிற்சியின் நிறைவில், பயிற்சியாளர்கள் தங்கள் கிராமங்களில் கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றுவோம் எனத் தீர்மானித்து கடந்து சென்றனர். பணித்தள விசுவாசிகள் மத்தியில் சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவண்டை நடத்தும் தாகம் பெருக ஜெபிப்போம்.

 ஜூலை 24 ஜூன் 5 அன்று ரிவைல்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 25 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். கர்த்தரை துதிக்கும் பாடல்கள், மற்றும் 'நீதியின் இராஜ்ஜியத்தை தேடுங்கள்" என்ற தலைப்பின் கீழ் தேவ வார்த்தைகள் பகிரப்பட்டு, தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ள வாலிபர்கள் வழிநடத்தப்பட்டனர்.  இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழவும், பணித்தளங்களில் புதிதாக கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டுள்ள ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜூலை 25 ஜூன் 2 அன்று ராம்நகர் பணித்தளத்தின் முஞ்ரா கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களில், சுமார் 65 பேர் பங்கேற்றனர். மேலும், ஜூன் 20 அன்று ராம்நகர் பணித்தளத்தின் சிகாரி கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட நபர்கள் நற்செய்தியினைக் கேட்டு தேவ சமாதானத்தையும் மற்றும் தேவ அன்பையும் அறிந்துக்கொண்டனர். இதில் பங்குபெற்ற ஒரு குடும்பத்தினர் தேவ அன்பினால் தொடப்பட்டு, தேவனை ஏற்றுக் கொள்ள தங்களை ஒப்புக்கொடுத்தனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்காகவும், தனிநபர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜூலை 26 ஸ்ரீநகர் பணித்தளத்தில் சுற்றுசுவர் இல்லாதக் காரணத்தால், சபை கூடுகைக்கு விரோதமாக எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தி சபை ஆராதனையில் இடையூறு விளைவிக்கின்றனர். இப்பணித்தள விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும். விரைவில் இப்பணித்தள ஆலயத்தைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்படவும் ஜெபிப்போம்.