ஜூன் 21 நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற “Good News Club” சிறுவர் ஊழியர்களின் மூலமாக 45 சிறுவர் சிறுமியருக்கும் மற்றும் மோத்திஹாரி பணித்தளத்தின் பைதரோலியா 50 சிறுவர் சிறுமியருக்கும், பக்ரி தயால் பணித்தளத்தில் 24 சிறுவர் சிறுமியருக்கும்,மஜ்ஹௌலியா பணித்தளத்தில் 40 சிறுவர் சிறுமியருக்கும் மற்றும் ஹர்னாடாட், பஸ்வாரியா, கர்காட்டி, சிற்சா மலைஹி டோலா, ராம்நகர் பணித்தளங்களில் 220 சிறுவர் சிறுமி இருக்கும் பாடல்கள் மட்டும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். இச்சிறுவர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டுள்ள வேத வசனங்கள் வரும் நாட்களில் நல்ல பலனைத் தர ஜெபிப்போம். ஜூன் 22 சஹார் பணித்தளத்தில் நடைபெற்ற வீட்டு ஜெபத்தில் 25 பேர் பங்கேற்றனர். சரையா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 20 விசுவாசிகள் பங்கேற்றனர். சப்ரா பணித்தளத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் 300 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, மோத்திஹாரி, மாதேபூர் பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். பஹாகா பணித்தளத்தில் நடைபெற்ற விடுதலைக் கூட்டத்தில் 70 பேர் பங்கேற்றனர். மேலும், மட்டியாரியா ஜீத்பூர், ஜோகாபட்டி மற்றும் சிவான் பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். நற்செய்தி அறிவிக்கப்பட்ட கிராமங்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ள ஜெபிப்போம்.
ஜூன் 23 ஜோகார்பட்டி பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் கணவன் மனைவியாக 50 தம்பதியர் பங்கேற்றனர். குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழவும், குடும்பத்தினர் மத்தியில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும், பல்வேறு ஆலோசனைகளுடன் வசனத்தின் அடிப்படையிலான தேவ செய்தியும் வழங்கப்பட்டது. பைரோகஞ்ச் பணித்தளத்தில் ஆராதனைக்கு எதிராக நிலவிவரும் எதிர்ப்புகள் நீங்கவும், ஜனங்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும், மஜ்ஹௌலியா பணித்தொட ஊழியர் இல்ல கட்டுமான பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
ஜூன் 24 மே 19 அன்று, ஜோகாபட்டி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 50 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஹர்னாடாண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கோடுகளில் 80 வாலிபர் பங்கேற்றனர். இக்கூட்டங்களில் சகோதரர் பழனிவேலு வாலிபரின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளுடன், வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற செய்தியையும் வசனத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டார். ஜெப வேளையின்போது, பல வாலிபர்கள் கிறிஸ்துவுக்கென்று தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். பணித்தளங்களில் செய்யப்பட்டு வரும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், வாலிபர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜூன் 25 மஜ்ஹௌலியா, ஜோகாபட்டி, சரையா மற்றும் கட்ஹனி பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 23 பேர், கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலம் வெளிப்படுத்தினார்; தேவனுக்கே மகிமை! மோத்திஹாரி பணித்தளத்தில் நடைபெற்று வரும் ஊழியர் இல்லம் மற்றும் பணித்தள அலுவலகக் கட்டுமான பணிகளில் தடையின்றி நடைபெறவும், ஏக்மா பணித்தள ஆலயத்திற்கு ஏற்ற நிலம் கிடைக்கவும் ஜெபிப்போம்.
