வடமேற்கு மண்டலம்
• ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தினங்கள் ராம்நகர் மற்றும் பகாஹா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களில் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 750-க்கும் அதிகமான விசுவாசிகள் பங்கேற்றனர். அத்துடன், ஏப்ரல் 6 மற்றும் 8 ஆகிய தினங்கள் பெத்தியா மற்றும் வால்மீகிநகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூட்டங்களில் 550-க்கும் அதிகமானோரும், தொடர்ந்து, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்கள் சப்ரா பணித்தளத்தில் நடைபெற்ற கூட்டங்களில் 350 பேரும், பெத்தியா பணித்தளத்தில் ஏப்ரல் 7 அன்று நடைபெற்ற குடும்பக் கூடுகையில் மண்டல ஊழியர்கள், வேதாகமப் புருஷர்கள் மற்றும் பெண்கள், விசுவாசிகள் 130 பேரும்; பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோ. ஃபிரடி ஜோசப் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.
• பெத்தியா, பகாஹா, மஹராஜ்கஞ்ச் மற்றும் ராம்நகர் ஆகிய பணித்தளங்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராகத் தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட 50 பேர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!
• பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் கூடுகையில் 60 பேர் பங்கேற்றனர்; சகோதரி எல்சிபா கர்த்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். குடும்பத்தையும், உறவினரையும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ............பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
• ஏப்ரல் 9,10,11 ஆகிய தினங்கள் படௌலி கிராமத்திலும், ஏப்ரல் 16 அன்று ராமசங்கர் கிராமத்திலும், ஷபாபூர் பகுதியில் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான நாட்களிலும் நடைபெற்ற உபவாசக்கூடுகைகள் ஆசீர்வாதமாக அமைந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சியடையவேண்டும் என்ற தாகத்துடன், தேசத்தையும் ஆதாயப்படுத்தவேண்டும் என்ற பாரத்தோடு இணைந்து ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார்.
• பணித்தளங்களில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளுக்காகவும், நவ்டான் மற்றும் போரையா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்படுவதற்கு ஏற்ற இடங்கள் கிடைக்கவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், மோத்திஹாரி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பயிற்சிமையம் மற்றும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.