March 2025

 வடமேற்கு மண்டலம்


  • ராம்நகர், திரோயா, ஷாபூர் மற்றும் நாராயண்பூர் ஆகிய பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு செவிகொடுத்து, இயேசு கிறிஸ்துவை தங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 64 பேர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவோடு தங்களை இணைத்துக்கொண்டனர்; தேவனுக்கே மகிமை!
  • பஹாகா பணித்தளத்தில் பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில், பணித்தள மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 
  • சகோ. மணிலால் தாஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்ததைத் தொடர்ந்து, ஜெப வேளையின்போது பலர் தங்கள் வாழ்க்கையை தேவனுக்கென்று அர்ப்பணித்தனர். 
  • பைரோகஞ்ச், ராம்நகர், கோராஷன், ருலாஹி, பஞ்சுவா மற்றும் வால்மீகிநகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சுவிஷேக் கூட்டங்களின் மூலமாக அநேகருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது; இக்கூட்டங்களில், சகோ. சிங்கேஷ்வர், சகோ. ஜோசப், R.P. தீமோத்தேயு மற்றும் சகோ. மணிலால் ஆகியோர் நற்செய்தியைப் பிரசங்கித்தனர்.  
  • பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலம் சிறுவர்களுடன், பெற்றோர்களுக்கும் கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 6 அன்று சபாபூர் கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் கூடுகையில் சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள் உட்பட 100 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையின்போது, 10 பேர் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டனர். 
  • பைரியா, கர்ஹானி மற்றும் எக்மா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரண்டு நாட்கள் உபவாசக் கூட்டங்களில், பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். 
  • பைரோகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்புக் கூடுகை ஆசீர்வாதமாக நடைபெற்றது. இக்கூட்டங்களில் சகோதரி எல்ஷிபா மற்றும் சகோ. சிங்கேஷ்வர் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். 
  • வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் நற்செய்திக் கூட்டங்களுக்காகவும், பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், நௌட்டான் மற்றும் போரியா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்பட ஏற்ற நிலங்கள் கிடைக்கவும், ஹர்னடண்ட், சாண்டி மற்றும் ரிவீல்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலய மற்றும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும