Promotional Centers & Contacts

FEBRUARY 2025

வடமேற்கு மண்டலச் செய்திகள் 



  • பணித்தள ஆலயங்களில் நடைபெற்ற புதுவருட ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். மிகுந்த குளிரின் மத்தியிலும், விசுவாசிகள் இரவு ஆராதனையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேவனை ஆராதித்து மகிமைப்படுத்தினர். 
  • பைரோகஞ்ச், பஹாகா, சன்பட்டியா, ரெக்சௌல் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில் விசுவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்று, பணித்தள மக்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். மேலும், பெத்தியா பணித்தளத்தில் 21 நாட்கள் நடைபெற்ற தொடர் ஜெபங்களும், விசுவாசிகள் தேவனோடு உள்ள தங்கள் உறவில் பெலப்பட வழிசெய்தது. 
  • பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். சிவான் பணித்தளத்தில் 150 பேரும், கும்கும்பூர் பணித்தளத்தில் 100 பேரும், பாவனா பணித்தளத்தில் 180 பேரும், தோரிகஞ்ச் பணித்தளத்தில் 80 பேரும், பசந்த்பூர் பணித்தளத்தில் 300 பேரும், ரிவீல்கஞ்ச் பணித்தளத்தில் 200 பேரும் மற்றும் பெல்வானியா பணித்தளத்தில் 400 பேரும் இக்கூட்டங்களில் பங்கேற்றனர்.
  • சுமார் 110 கிராமங்களில் கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும், கைப்பிரதிகள் மற்றும் தனிநபர்  ஊழியங்களின் மூலமாக சுவிசேஷத்தினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். மேலும், ஜெம்ஸ் சிறுவர் ஊழியத்தின் மூலமாக சிறுவர் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், குளிர் ஆடைகளை அன்பளிப்பாக வழங்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.
  • நவ்டான் மற்றம் போரை ஆகிய பணித்தளங்களில் பணித்தள ஆலயங்கள் கட்டுவதற்கான நிலம் விரைவில் கிடைக்கவும் மற்றும்; இப்பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்படவும், மோத்திஹாரி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி மையம் மற்றும் ஊழியர் இல்லம் ஆகியவைகளின் கட்டுமானப்பணிகளுக்காகவும், சாண்டி பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் தடையின்றி நடைபெறவும் மற்றும் எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும், ரிவீல்கஞ்ச் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.